Saturday 26 May 2012

SAMAYAL: காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா


காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
மசாலா அரைத்துக்கொள்ள:
வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.
* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Thursday 24 May 2012

மாங்காய் தொக்கு


  • ஒட்டு மாங்காய் - 1 (கிளி மூக்கு மாங்காய்)
  • வரமிளகாய் தூள் - 5 ஸ்பூன்
  • வெந்தயம் - 2 ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 சிறு துண்டு
  • கல் உப்பு - தேவயான அளவு
  • நல்லெண்ணை - 50 கிராம்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • மாங்காயை தோல் சீவி வாழக்காய் சிப்ஸ் சீவியில் சீவி வைக்கவும்.
  • வெந்தயம், பெருங்காயம் இவற்றை எண்ணையில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும்.
  • ஒரு இரும்பு கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாயில் நல்லெண்ணை ஊற்றி கடுகு சேர்த்து வெடித்ததும் சீவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மாங்காய் குழையும் வரை வதக்கவும்.
  • பின் வரமிளகாய் தூள், பொடித்து வைத்துள்ள வெந்தயம்,பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
  • ஆறியதும் கண்ணாடி ஜாடி அல்லது பாட்டிலில் ஸ்டோர் பண்ணவும். லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதத்துக்கு சூப்பரான சைட் டிஷ் .

Saturday 19 May 2012

SAMAYAL: மாங்காய் இனிப்பு தொக்கு

தேவையான பொருட்கள்

கிளிமூக்கு மாங்காய் - 1 பெரியது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெல்லம் (துருவியது) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1. மாங்காயை தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.


3. பிறகு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, உடன் வெட்டி வைத்துள்ள மாங்காயைப் போட்டு கிளறி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

4. மாங்காய் நன்றாக வெந்ததும், துருவிய வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, சுமார் ஐந்து நிமிடம் வரை சிறுதணலில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு

1. இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையோடு இந்த தொக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

2. இந்த தொக்கு குழைவாக வெந்து இருந்தால் சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

3. தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் போன்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

4. தொக்கு செய்யும் போது, அடுப்பை சிறு தணலில் மட்டுமே வேகவிடவும்.

Sunday 6 May 2012

பாதாம் ஹல்வா


பாதாம்  ஹல்வா – சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .
தேவையானவை:
பாதாம் பருப்பு 2 கப் விழுது (250  கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் – 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை:
பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு  கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட  ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில்  கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா  உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட “பாதாம் ஹல்வா” வை  பரிமாறவும்.

SAMAYAL: சத்துமாவு கஞ்சி

இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .
தேவையானவை :
வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
செய்முறை :
வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .
குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 – 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.
உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்

வெங்காய மசாலா

தேவையான பொருட்கள் :

1 .வெங்காயம் - 3
2 .உருளைக்கிழங்கு - 1
3 .பட்டாணி - 50 கிராம்
4 .தக்காளி - 2
5 .நல்லெண்ணெய் - தேவையான அளவு
6 .காய்ந்த மிளகாய் - 10
7 .சீரகம் - 1 ஸ்பூன்
8 .கொத்தமல்லி - 1 ஸ்பூன்
9 .கடுகு - சிறிதளவு
10 .உப்பு - தேவையான அளவு
11 .மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை
மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும். பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி.

Wednesday 2 May 2012

சமையல் shortcut

மனிதன் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ நாக்கை நமக்கு அடிமையாக்க வேண்டும்.நாக்கிற்கு நாம் அடிமையாக கூடாது